உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதா


Your Weight(kg):
Your Height(cm):

Your BMI:
This Means:

புத்துணர்ச்சி தரும் யோகா பயிற்சி

யோகா பயிற்சி உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.

* யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!

* நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.

* யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.

* நீங்கள் எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களுடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி.

* யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும். மற்ற பயிற்சிகளைவிட யோகாவில் மட்டுமே, ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகை பாதுகாக்கிறது. இதனால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும்.

* யோகா உடம்பை சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும்.

குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும்

அன்றாட பழக்கவழக்கத்தால் உடல் பருமனாகும் அபாயம்

பொதுவாக ஒருவரின் அழகை நாம் தீர்மானிப்பது அவரின் உடல் கட்டமைப்பை வைத்து தான். ஒருவர் மிகவும் மெலிந்து இருந்தாலும் சரி அல்லது மிகவும் குண்டாக இருந்தாலும் சரி அவரின் தோற்றம் எடுப்பாக இருப்பது கடினமே. சரியான கட்டமைப்புடன் இருந்தால் வலிமையாகவும், அழகாகவும் தோன்றும்.

முக்கியமாக உடல் பருமன் என்பது பலரும் சந்திக்கும் பிரச்சினை. அது அழகை மட்டும் அல்லாது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இதனால் அவர்கள் தினசரி பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். திடீரென்று எடை அதிகமாக கூடி விட்டதாப உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன.

அதற்கு நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே முக்கிய காரணம். இதற்கு குடும்ப பாரம்பரியம் அல்லது உடலில் உள்ள பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.

நாம் அன்றாடம் செய்யும் காரியங்களில் நம் உடல் மெட்டபாலிசத்தில் (பரிணாம வளர்ச்சி) தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்மில் பல பேருக்குதெரிவதில்லை. கீழ் கூறிய டிப்சை படித்து எடை அதிகரிக்காமல் கவனமாக இருப்பது எப்படிஎன்பதை நன்கு அறிந்துக் கொள்ளலாம்.

தூக்கம்............ போதிய தூக்கம் கிடைக்க வில்லையா? அப்படியானால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகமாக பசிக்கும். அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் கூடும்.

மதுபானம்.......... பல ஆண்கள் கடின உழைப்பிற்கு பின் அலுப்பு தெரியாமல் இருக்க மது அருந்துவர். இது மன அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைத்திருந்தாலும், காலப்போக்கில் எடையை அதிகரிக்க செய்யும்.

காலை உணவு........ மற்ற வேளைகளில் நாம் உண்ணும் உணவை விட காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. இரவு நன்றாக தூங்கிய பின் காலை நம் உடம்பிற்கு போதிய அளவு எரிபொருள் வேண்டாமா? காலை சாப்பிடவில்லையென்றால் நம் மெட்டபாலிசம் பாதிக்கப்படும்.

அளவில்லாமல் சாப்பிடுவது.......... அதிகமாக சாப்பாடு பரிமாறிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சரியான அளவு உணவே ஆரோக்கியத்தை தரும்.

உடற்பயிற்சி...... கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டால் தேவைக்கு அதிகமான கலோரிகளை எரிக்கும். அது உங்கள் உடல்கட்டமைப்பு மற்றும் தன் னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

இரவு விருந்து......... இரவு விருந்து முடிந்த பின் இனிப்பு பலகாரங்களை பொதுவாக உண்ணும் பழக்கம் உள்ளோர், அதற்கு பதில் சூடான தேநீர், சோடா அல்லது கலோரி இல்லாத உணவை உண்ணலாம்.

ஓட்டல் கடை........ கடும் பசியில் இருக்கும் போது கடைக்கு போனால், பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை தான் முதலில் தேர்ந்தெடுப்போம். அதற்கு பதில் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு சென்றால் பசி சிறிதளவாவது அடங்கும்.

கடையிலும் ஆரோக்கியமான பொருளை வாங்கலாம் அல்லது போகும் வழியில் ஒரு சாண்ட்விச் அல்லது க்ரில் செய்த கோழிக்கறி போன்றவற்றை சாப்பிடவும். நீங்கள் விமான நிலையத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சென்ற இடத்தில் பசி எடுத்தால் அருகில் என்ன கிடைக்கிறதோ அதை வாங்கி உண்ணுவோம் அல்லவா? பெரும்பாலும் நமக்கு கிடைக்கும் உணவு அனைத்தும் ஜங்க் உணவுகளே. அதனால் முன் கூட்டியே திட்டம் தீட்டி வீட்டிலிருந்தே சாண்ட்விச், பச்சை கேரட், நற்பதமான பழங்கள், பழச்சாறு என்று எதாவது எடுத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு........ உணவு வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அளவில்லாமல் சாப்பிடுவது பலரது வழக்கம். இதனால் கணக்கில்லாமல் அதிக அளவு உணவை உட்கொள்கிறோம். எந்த அளவு உணவு சரியானது என்பதைதெரிந்து கொண்டு, அந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

கலோரி உணவுகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். ஆரோக்கியமான பிஸ்கட் மற்றும் இதர உணவுகள் என்று கூறப்படும் அனைத்தும் அப்படி இருப்பதில்லை. எந்த அளவு கலோரி இருந்தாலும் அது நம் உடலுக்கு தீமையே. இதை போன்ற உணவுகளை தவிர்க்கவும்.

சாண்ட்விச்...... கடுகு அல்லது கொழுப்பு சத்து இல்லாத மயோனிஸை சாண்ட்விச்சில் தடவி உட்கொண்டால் கலோரி கட்டுப்பாட்டில் இருக்கும். இதனுடன் சேர்ந்து வெட்டிய காய்கறிகளையும் வைத்தால் ருசியுடன் ஆரோக்கியமும் கூடும்.

வார இறுதியில் அதிகமாக உண்ணுவது....... வார நாட்களில் உணவை கட்டுப்பாட்டில் வைத்து விட்டு, வார இறுதியில் உங்கள் கட்டுப்பாட்டை தளர்த்தி விடுகிறீர்களா? அப்படிச் செய்தால் வாரம் முழுவதும் கடைபிடித்த கட்டுப்பாடு வீணாகப் போய் விடும். இதனை தவிர்க்க தினமும் சிறிதளவு கட்டுப்பாட்டில் இருந்து தளர்த்திகொள்ளலாம்.

செயற்கை இனிப்பு...... செயற்கை இனிப்பு என்பது இயற்கை சர்க்கரையை விட 7000 மடங்கு அதிக சுவை நிறைந்தது. இது உங்கள் சுவை உணர்ச்சியை மங்கச் செய்யும் திறன் உள்ளது. செயற்கை இனிப்பு நமக்கு தெரியாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு தானியங்கள், புரதச்சத்து உள்ள பொருட்கள், சுவைச்சாறு, ஏன் குழந்தையின் உணவு பொருட்களில் கூட இருக்கிறது.

கீழ்கண்ட திறவுச்சொல் நீங்கள் வாங்கும் உணவு பொருளின் லேபிலில் இருக்கிறதா என்பதை சரி பாருங்கள்: சக்கரின், அஸ்பர் டேம் , சுக்ரலோஸ், நியோ டேம், ஏஸ்சுல்பேம்.

உணவு பாக்கெட்.......... உணவு பாக்கெட்டில் இருந்து அப்படியே உண்ணுவது என்பது பெரிய ஆபத்து. ஏனென்றால் நாம்எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டு விடுவோம். பாக்கெட்டுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மற்றவர்களிடம் சேர்ந்து உண்ணுதல்......... உதாரணத்திற்கு ஒருவரோடு சேர்ந்து சாப்பிட்டால், எப்போதும் சாப்பிடுவதை விட 35% அதிகமாக சாப்பிடுவோம். நான்கு பேருடன் சாப்பிட்டால் 75% அதிகமாக சாப்பிடுவோம்.

இதுவே ஏழுஅல்லது அதற்கு மேல் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டால், தனியாக சாப்பிடுவதை விட 96% அதிகமாக சாப்பிடுவோம். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், கவனமாக இல்லையென்றால் ஒரு வருடத்திற்கு 72,000 கலோரிகளை அதிகமாக உட்கொள்கிறோம். இது கிட்டத்தட்ட 9 கிலோ எடையை கூட்டும். எனவே அளவாக உண்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்!